நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக்கதைகளை உருவாக் கினோம். நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நாம் இயற்கையை அடிபணிய வைத்தோம். நம்முடைய விநோதமான கனவுகளை நனவாக்குவதற்காக உயிரினங்களை இப்போது நாம் மறுவடிவமைப்பு செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் நாம் யார் என்பதை இனியும் நாம் அறிந்திருக்கிறோமா?அல்லது நம்முடை யகண்டுபிடிப்புகள் நம்மை உதவாக்கரைகளாக ஆக்கிவிடப் போகின்றவா? இன்று நம்முடைய இனத்தைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற, இதுபோன்ற மிகமுக்கியமான பிரச்சனைகளின் ஊடாக ஒரு சாகசப்பயணத்தில் யுவால் நோவா ஹராரி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். நம்மை நிலை தடுமாறச் செய்கின்ற தொடர்ச்சியான மாற்றத்தை இன்று நாம் எதிர் கொண்டுள்ள நிலையில், தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் நம்முடைய கவனத்தைத் தக்கவைத்துக் கொள்வது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது. நாம் உருவாக்கி வைத்துள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான திறன் இனியும் நமக்கு இருக்கிறதா?