Availability: In stock
பெண் விருத்த சேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைப்புபோல பலவிஷயங்கள், ஆப்பிரிக்கா விலுள்ள இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்துவருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை 13 கோடி பேரிடம் இக்கொடும்நடவடிக்கை கைக்கொள்ளப்பட் டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கானப் பிரிவு மதிப்பீடு செய்திருந்தது.
நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் இப்போது பேசியிருக்கிறேன்….